கடலுக்குள் விழுந்த கண்ணீர் துளி
உரைந்ததுபோல் காட்சியளிக்கும்
ஈழம் எனும் கண்ணீர் தேசம்.
உறவுகளை இழந்து
உரிமைகளை இழந்து
இலங்கை அரசின் இனவெறிக்கு இரையாகி
இழப்பை மட்டும் தன்னகம் கொண்ட
ஈழ தமிழகம் .
தமிழ் ஈழம் காக்கவும்
தம் மக்கள் மானம் காக்கவும்
மற்போர் புரியும் ஈழத்தமிழன்
அவன் வீரதமிழன்.
இந்தியாவிலும் ஓர் தமிழினம் உண்டு
இங்கு அஹிம்சையை அறமாகக்கொண்டு
ஆட்சிபுரியும் அரசு என்று சொல்லிக் கொள்(ல்)வதும் -உண்டு.
கலையுலகதவரை ஆட்சியில் அமரவைத்து
அழகுபார்த்த இந்திய தமிழன்-இன்று
ஈழத்தில் இன அழிவிற்காக
அரசியல் தலைவர்கள் அரங்கேற்றும்
அற்ப அரசியல் நாடகங்களை -கண்டு
இனம் காக்க இயலாதவனாய்
மானம் இழந்து
மதி இழந்து
உயிர் இருந்தும்
இறந்தவனாய் -இருக்கிறான்
தமிழினமே
விவேகம் கொள்
விழித்திரு எழுந்திரு !!!
மச்சான் எப்படிடா இப்படி எல்லாம் சும்மா அருமையா நச் என்று எழுதி இருக்காய்
ReplyDelete/இந்தியாவிலும் ஓர் தமிழினம் உண்டு
ReplyDeleteஇங்கு அஹிம்சையை அறமாகக்கொண்டு
ஆட்சிபுரியும் அரசு என்று சொல்லிக் கொள்(ல்)வதும் -உண்டு.//
சூப்பர் என்ன சொன்னாலும் இவங்க இப்படி தான்
நன்றி சுரேஷ்
ReplyDeleteஅவங்க அப்படித்தான்
நாம இப்படிதான்
மாற்றாம் மட்டும் எப்படி ????