Monday, April 27, 2009

ஈழமும் இந்தியாவும்


கடலுக்குள் விழுந்த கண்ணீர் துளி
உரைந்ததுபோல் காட்சியளிக்கும்
ஈழம் எனும் கண்ணீர் தேசம்.

உறவுகளை இழந்து
உரிமைகளை இழந்து
இலங்கை அரசின் இனவெறிக்கு இரையாகி
இழப்பை மட்டும் தன்னகம் கொண்ட
ஈழ தமிழகம் .

தமிழ் ஈழம் காக்கவும்
தம் மக்கள் மானம் காக்கவும்
மற்போர் புரியும் ஈழத்தமிழன்
அவன் வீரதமிழன்.

இந்தியாவிலும் ஓர் தமிழினம் உண்டு
இங்கு அஹிம்சையை அறமாகக்கொண்டு
ஆட்சிபுரியும் அரசு என்று சொல்லிக் கொள்(ல்)வதும் -உண்டு.

கலையுலகதவரை ஆட்சியில் அமரவைத்து
அழகுபார்த்த இந்திய தமிழன்-இன்று
ஈழத்தில் இன அழிவிற்காக
அரசியல் தலைவர்கள் அரங்கேற்றும்
அற்ப அரசியல் நாடகங்களை -கண்டு
இனம் காக்க இயலாதவனாய்
மானம் இழந்து
மதி இழந்து
உயிர் இருந்தும்
இறந்தவனாய் -இருக்கிறான்

தமிழினமே
விவேகம் கொள்
விழித்திரு எழுந்திரு !!!

Saturday, April 4, 2009

விவேகம் கொள் !!!



அடிமை எண்ணம்
அறியாமையின் அகவெளிப்பாடு
பயம் அதன் புரவெளிப்பாடு
இதை அடிப்டையகக்கொண்டு
நம்மை ஆண்டவர்கள் இருவர்
சுதந்திரதிற்குமுன் -அந்நியர்கள்
சுதந்திரத்திற்குபின் - அரசியல்வாதிகள்
மாற்றத்தை மற்றவரிடம் எதிர்பார்த்து
மனமந்தத்தில் இருக்கும் தோழனே
உன்னுள்நோக்கு .....

விவேகம் கொள் !!!
தோழனே .... நல்
எண்ணங்களின் எழுச்சியை -உன்
திசுக்களிலும் திணித்துவிடு - பின்
மன மாற்றமடையும்
மன மாயைமடியும்
சிந்தனை தெளிவடையும்
சீர்மிகு செயல் பிறக்கும்
உன் சுற்றம் விழிப்படையும்
உன் சூழல் சொர்கமாகும்
புதுமை மலர
புரட்சி பிறக்கும்-பின்
தேசம் செழிக்கும்.....
என் தோழனே -இனி
விவேகம் கொள்
விழித்திரு எழுந்திரு !!!