Monday, April 27, 2009

ஈழமும் இந்தியாவும்


கடலுக்குள் விழுந்த கண்ணீர் துளி
உரைந்ததுபோல் காட்சியளிக்கும்
ஈழம் எனும் கண்ணீர் தேசம்.

உறவுகளை இழந்து
உரிமைகளை இழந்து
இலங்கை அரசின் இனவெறிக்கு இரையாகி
இழப்பை மட்டும் தன்னகம் கொண்ட
ஈழ தமிழகம் .

தமிழ் ஈழம் காக்கவும்
தம் மக்கள் மானம் காக்கவும்
மற்போர் புரியும் ஈழத்தமிழன்
அவன் வீரதமிழன்.

இந்தியாவிலும் ஓர் தமிழினம் உண்டு
இங்கு அஹிம்சையை அறமாகக்கொண்டு
ஆட்சிபுரியும் அரசு என்று சொல்லிக் கொள்(ல்)வதும் -உண்டு.

கலையுலகதவரை ஆட்சியில் அமரவைத்து
அழகுபார்த்த இந்திய தமிழன்-இன்று
ஈழத்தில் இன அழிவிற்காக
அரசியல் தலைவர்கள் அரங்கேற்றும்
அற்ப அரசியல் நாடகங்களை -கண்டு
இனம் காக்க இயலாதவனாய்
மானம் இழந்து
மதி இழந்து
உயிர் இருந்தும்
இறந்தவனாய் -இருக்கிறான்

தமிழினமே
விவேகம் கொள்
விழித்திரு எழுந்திரு !!!

Saturday, April 4, 2009

விவேகம் கொள் !!!



அடிமை எண்ணம்
அறியாமையின் அகவெளிப்பாடு
பயம் அதன் புரவெளிப்பாடு
இதை அடிப்டையகக்கொண்டு
நம்மை ஆண்டவர்கள் இருவர்
சுதந்திரதிற்குமுன் -அந்நியர்கள்
சுதந்திரத்திற்குபின் - அரசியல்வாதிகள்
மாற்றத்தை மற்றவரிடம் எதிர்பார்த்து
மனமந்தத்தில் இருக்கும் தோழனே
உன்னுள்நோக்கு .....

விவேகம் கொள் !!!
தோழனே .... நல்
எண்ணங்களின் எழுச்சியை -உன்
திசுக்களிலும் திணித்துவிடு - பின்
மன மாற்றமடையும்
மன மாயைமடியும்
சிந்தனை தெளிவடையும்
சீர்மிகு செயல் பிறக்கும்
உன் சுற்றம் விழிப்படையும்
உன் சூழல் சொர்கமாகும்
புதுமை மலர
புரட்சி பிறக்கும்-பின்
தேசம் செழிக்கும்.....
என் தோழனே -இனி
விவேகம் கொள்
விழித்திரு எழுந்திரு !!!
























Friday, March 13, 2009

தேவனுக்கு என் முதல் பதிவு


கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை நான் நடந்து கொண்டு இருக்கும் பொழுது இயேசு சிலை முன் ஒருவர் மண்டியிட்டு மன்றாடியதை கண்டு என் மனதில் தோன்றியதை முதல் பதிவு செய்ய விரும்புகிறேன் ...

தேவனே..
கனத்த இதயமும் ..
கண்களில் கண்ணீருமாய்..உன்னை
பார்பவரின் பாவப் பொதியை பெற்றுக்கொண்டு
பரிவுடன் புன்னகைக்கிறாய்
என்னிடம் உள்ள சிறு புண்ணியத்தை
பரிசளிக்க நினைத்து ..உன்னை
பார்த்த பொழுது
என் மனம் கணம் கொண்டு
கண்களில் கண்ணீர் பெருகியது -நீயோ
மிண்டும் புன்னகைக்கிறாய்
ஆம் நீ கடவுளாயிற்றே ...!!!!!!